உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வு

கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். நாட்டுப்புற கலைஞர் கணேசன் மற்றும் பள்ளி மேலாண்மை குழு மாவட்ட கருத்தாளர் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கோத்தகிரி 'கீ ஸ்டோன்' தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர் புவனேஸ்வரி பங்கேற்று, பல்லுயிர் பெருக்கத்தின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தாவரங்கள் மற்றும் விலங்குகளை பேணுவதன் முக்கியத்துவம் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.குறிப்பாக, எதிர்காலத்தில் தட்டுப்பாடு இல்லாமல் நிறைவான தண்ணீர் கிடைக்க, சதுப்பு நிலங்கள் அழியாமல் பாதுகாப்பது, பிளாஸ்டிக் புழக்கத்தை தவிர்ப்பதன் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.ஆங்கில பட்டதாரி ஆசிரியர் சோனியா, உதவி ஆசிரியர் கமலா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்