உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி உத்சவ அபிவிருத்தி அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் 120 பேருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை நேற்று வழங்கப்பட்டது.ஸ்ரீபெரும்புதுார் எதிராஜ நாதவல்லி தாயார் நவராத்திரி உத்சவ அபிவிருத்தி அறக்கட்டளை சார்பில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கி வருகின்றனர்.அந்த வகையில், ராமானுஜர் கோவில் அருகே உள்ள அண்ணா சன்னிதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளி மாணவ, மாணவியர் 120 பேருக்கு, 1.50 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை, நோட்டு புத்தகங்கள், எழுதுபொருட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.அறக்கட்டளை தலைவர் நாராயணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர்கள் கோவிந்தன், கோபால், ராமானுஜம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்