உள்ளூர் செய்திகள்

எஸ்.ஐ., அறிவுரையால் பள்ளி சென்ற மாணவர்

திருப்பூர்: பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்த மாணவனுக்கு, எஸ்.ஐ., அறிவுரை வழங்கியதையடுத்து, மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்.திருப்பூர் மாவட்டம், முத்துாரை சேர்ந்தவர் தமிழரசி, விவசாய தொழிலாளி. இவரது, 13 வயது மகன், அருகிலுள்ள அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார். தாய் வேலைக்கு சென்ற பின், பள்ளிக்கு செல்லாமல், சிறுவன் விளையாடி கொண்டிருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி கொண்டிருந்தார். பள்ளிக்கு சரியாக வராதது குறித்து பள்ளி தரப்பில் தாயாரிடம் கூறினர்.இதனால், மாணவன் எதிர்காலம் குறித்து ஆசிரியை ஒருவர், வெள்ளகோவில் போலீஸ் எஸ்.ஐ., மனோஜ் குமாரிடம் தெரிவித்தார். ஆசிரியையுடன் மாணவரின் வீட்டுக்கு சென்ற எஸ்.ஐ., மாணவனுக்கு எதிர்காலம் வாழ்க்கை, படிப்பின் அவசியம் குறித்து எடுத்துரைத்து அறிவுரை கூறினார். பின், மீண்டும் சிறுவன் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்