வி.ஆர்.எஸ்., பொறியியல் கல்லுாரியில் பயிற்சி பட்டறை
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசூர் வி.ஆர்.எஸ்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில் 'எல்கோமீட் 2025-26' தலைப்பில் ஒரு நாள் கருத்து பட்டறை நடந்தது.மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் நடந்த பட்டறைக்கு, தாளாளர் சரவணன் தலைமை தாங்கினார். முதல்வர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மாணவி சந்தியா வரவேற்றார்.என்.எல்.சி., நிறுவன மனிதவளத்துறை, துணை பொதுமேலாளர் சுஜேஷ் சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து, பல்வேறு பொறியியல் கல்லுாரி மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டது. சிறந்த 3 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட சிறந்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் தொழில்நுட்ப நிகழ்வுகளில் வென்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.துணை முதல்வர் ஜோசப் இக்னேஷியஸ், புல முதன்மையர் சாதிக்பாட்ஷா, துறை தலைவர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர். மாணவி அமுதினி நன்றி கூறினார்.