உள்ளூர் செய்திகள்

பழங்குடியின மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வினியோகம்

பந்தலூர்: பந்தலூர் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளி, பழங்குடியினர் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், படிக்கும் பழங்குடியின மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். தேவாலா போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கருப்புசாமி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, முத்துாட் நிறுவனம் சார்பில், 23 மாணவர்களுக்கு, 1.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிள்களை மண்டல மேலாளர் அருண் வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்