என்.எம்.எம்.எஸ்., தேர்வில் அன்னூர் மாணவர்கள் சாதனை
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், மூன்று மாணவர்கள், என்.எம்.எம்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.அன்னூர் அமரர் முத்து கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பிருந்தா, 109 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். அவருக்கு பள்ளி தலைமையாசிரியர் சிவசக்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.ஒரைக்கால் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர் எட்வின் 120 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி தலைமை ஆசிரியை ஜோதி மற்றும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரசு உதவி பெறும் அன்னூர் கே.ஜி., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவி கீர்த்தனா தேர்ச்சி பெற்றுள்ளார்.அவருக்கு நிர்வாக அறங்காவலர் ராமசாமி, அறங்காவலர் சாந்தாமணி ராமசாமி மற்றும் ஆசிரியைகள் வாழ்த்து தெரிவித்தனர்.தேர்ச்சி பெற்ற மூவருக்கும், அடுத்து நான்கு ஆண்டுகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.