உள்ளூர் செய்திகள்

இளங்கலை பார்மசிஸ்ட் படிப்பு துவங்க ஆய்வு

விருதுநகர்: மதுரை, விருதுநகர், சிவகங்கை உட்பட 13 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை துவங்கும் சாத்தியக்கூறுகளை தமிழக அரசு ஆய்வு செய்துள்ளது.சென்னை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், தர்மபுரி ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது டிப்ளமோ நர்சிங் உட்பட பல்வேறு பாரா மெடிக்கல் படிப்புகள் வழங்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் தற்போது இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை துவங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தமிழக அரசு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.கட்டுமானங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தலா 100 இடங்களுடன் கூடிய கல்லூரிகள் துவங்கப்பட உள்ளன.இதனால் நீட் தேர்ச்சி பெற்று மருத்துவம் படிக்க முடியாத மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை பார்மசிஸ்ட் படிப்புகளை படிக்க முடியும். எதிர்காலத்தில் அதற்கான இடங்களை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்