வேலு நாச்சியார் ஓவியம் மாணவிகள் சாதனை
காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ராஜராஜன் கல்வியியல் கல்லூரி மாணவிகள் 5 ஆயிரம் சதுர அடியில் 2 மணி நேரத்தில் ராணி வேலுநாச்சியார் ஓவியத்தை வரைந்து சாதனை படைத்தனர்.ராஜராஜன் கல்வியியல் கல்லூரி, மகளிர் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மகளிர் தினத்தை முன்னிட்டும், ராணி வேலு நாச்சியார் 292வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாகவும் அவரது உருவத்தை 5 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 மணி நேரத்தில் வரைந்து வண்ணமிட்டனர்.ஓவியத்தை வரைய மாணவிகள் 4.2 கிலோ கடல் உப்பு, கோதுமை மாவு பயன்படுத்தினர்.மாணவிகளின் இச்சாதனை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்தது. அழகப்பா பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுப்பையா தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர்கள் சிவக்குமார், அங்கயர்கண்ணி முன்னிலை வகித்தனர்.மாணவிகளின் சாதனையை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை அமைப்பின் நிறுவனர்கள் வெங்கடேசன் கலைவாணி கண்காணிப்பு செய்து உலக சாதனையாக அறிவித்து விருதினை வழங்கினர்.