பள்ளி கல்லுாரி செய்திகள்: ஹேக்கத்தான் போட்டிகள்
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி கணினி அறிவியல் தகவல் தொழில்நுட்பம் வேலை வாய்ப்பு பிரிவுடன் இணைந்து 'நெக்ஸ்ட் ஜென் இன்னோவேஷன் ஹேக்கத்தான்' போட்டிகள் நடந்தது.மொத்தம் 131 மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் சேர்ந்த ரமேஷ் ஜெயசங்கர் ராமசாமி, முனைவர் ஹேமலதா நடுவர்களாக இருந்தனர். இணைய வழியாக பாண்டி கம்யூனிகேஷன்ஸ் அதிகாரி சரவணன் கனகராஜ், லண்டன் நகரின் வெங்கட்ராமன் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை முதல்வர் ராஜகருணாகரன், இயக்குனர் கணேசன், துறை தலைவர்கள் விஜயலட்சுமி, அனுசுயா, கோமதிநாயகம் தலைமையில் பேராசிரியர்கள் செய்தனர்.