உள்ளூர் செய்திகள்

ஜிப்மரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில், அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இயக்குநர் விர் சிங் நெகி தலைமை தாங்கினார். பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள், மற்றும் பல்வேறு சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.ஜிப்மரின் முக்கிய சாதனைகள், முன்னெடுப்புகள் மற்றும் நிகழ்வுகள், கல்வி, மருத்துவ சேவை மற்றும் ஆராய்ச்சி துறைகளில் நடைபெறும் செயல்பாடுகளின் ஒட்டு மொத்த கண்ணோட்டத்தையும் வழங்கும் வகையில், 'வணக்கம் ஜிப்மர்' என்ற ஜிப்மரின் அதிகாரப்பூர்வ செய்திமடலை இயக்குநர் விர் சிங் நெகி வெளியிட்டார்.விழாவில், ஜிப்மர் கல்லுாரி முதல்வர் விக்ரம் காட்டே, மருத்துவ கண்காணிப்பாளர் சாகா வினோத்குமார், இணை இயக்குனர் ரங்கபாஷியம், மூத்த நிர்வாக அதிகாரி ஹவாசிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்