மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு இயக்கம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, பள்ளியில் மாணவர் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.பொள்ளாச்சி அருகே டி. நல்லிக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர் சேர்க்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பெற்றோர், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.வட்டார கல்வி அலுவலர் வெள்ளியங்கிரி துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் சந்திரா, ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதில், பொதுமக்கள், 'அரசுப்பள்ளி நம் பள்ளி என்றும்; இது எங்கள் பள்ளி என பெருமை அடைவோம், பள்ளியால் நாங்கள், எங்களால் பள்ளி பெருமை அடையச் செய்வோம் என வலியுறுத்தி கையெழுத்திட்டனர்.