உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.புதுச்சேரி முழுதும் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) மொத்தம் 410 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது.இந்நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான 2026-27 பாடப்புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி., நிறுவனத்திடமிருந்து கொள்முதல் செய்ய கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தது.இதனைத் தொடர்ந்து, முதல் கட்டமாக 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் 9ம் வகுப்பு தவிர்த்து கடந்த 17ம் தேதி வந்திறங்கின. இந்த புத்தகங்கள் லாஸ்பேட்டையில் உள்ள வெங்கடசுப்ப ரெட்டியார் அரசு தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.தொடந்து, பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பெத்திசேட்டிப்பேட்டில் உள்ள தியாகி நடேசன் அரசு துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தமயந்தி ஜாக்குலின் பாடபுத்தகங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்