பெரியார் பல்கலையில் மாணவர் சேர்க்கை துவக்கம்
ஓமலூர்: சேலம் பெரியார் பல்கலையில், 2026 - 27ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.இது குறித்து பல்கலை பதிவாளர் ராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியார் பல்கலையில், 27 துறைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளில், 22 கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நுழைவுத் தேர்வு வழியாகவும், 10 கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நேரடி சேர்க்கை வழியாகவும், மாணவர் சேர்க்கை நடக்கிறது. நுழைவுத் தேர்வு சேர்க்கை பாடப்பிரிவுஎம்.ஏ., தமிழ், ஆங்கிலம், எம்.காம்., எம்.பி.ஏ., பொது மற்றும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மேலாண்மை; எம்.எஸ்.சி., பயன்பாட்டு உளவியல், உயிர் வேதியியல், உயிரியல் தொழில்நுட்பம், தாவரவியல், வேதியியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, கணினி அறிவியல், தரவு அறிவியல், உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஊட்டச்சத்து, புவியமைப்பியல், கணிதவியல், நுண்ணுயிரியல், இயற்பியல், புள்ளியியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல், விலங்கியல்.எம்.சி.ஏ., நேரடி சேர்க்கை பாடப்பிரிவுஎம்.ஏ., பொருளியல், வரலாறு, இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சமூகவியல்; எம்.எட்., நுாலகம் மற்றும் தகவல் அறிவியல்; எம்.எஸ்.சி., ஆற்றல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், முதுகலை சமூகப்பணி; எம்.டெக்., ஆற்றல் தொழில்நுட்பவியல்; இரண்டு, 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளான இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல், சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றுடன் இளநிலை தொழிற்கல்வி சார்ந்த படிப்புகளான உணவு அறிவியல், ஊட்டச்சத்து ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பியல்.மேலும் பட்டையப் படிப்புகள், பகுதி நேர, முதுகலை படிப்பான திராவிட இலக்கியம் மற்றும் இதழியல் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடக்கிறது. 2026 - 27ம் கல்வி ஆண்டு முதல், பெரியாரியல், அண்ணாயியல், கலைஞரியல் ஆகிய பகுதி நேர சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. தர்மபுரி பெரியார் பல்கலை பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 8 முதுநிலை படிப்புகளுக்கும் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரியார் பல்கலை இணையதளமான, www.periyaruniversity.ac.in வழியே விண்ணப்பிக்கலாம்.