உள்ளூர் செய்திகள்

சென்னைஸ் அமிர்தாவில் ஏர்ஏசியா வளாக நேர்காணல்

சென்னையில் விமானத் துறையில் கல்வி - தொழில் இணைப்பை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாக, சென்னைஸ் அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி வளாகத்தில் முதன்முறையாக ஏர்ஏசியா நிறுவனத்தின் வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஏர்ஏசியா ரெட்க்யூ, கோலாலம்பூரில் ஏ.ஓ.சி., லைன் பராமரிப்பு பிரிவு தலைவரான சரவணன் ராஜ் முனுசாமி, கௌரவ விருந்தினராக மலேசியாவின் முன்னாள் துணை அமைச்சரும், பெராக் மாநில சட்டமன்றத்தின் முன்னாள் தலைவருமான டத்தோ ஸெரி டாக்டர் எஸ்.கே. தேவமணி மற்றும் சென்னைஸ் அமிர்தா கல்விக்குழும நிறுவனர் பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த வேலைவாய்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்திய சென்னைஸ் அமிர்தா, தனது மாணவர்களுக்கு ஆசியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்ஏசியாவில் நேரடி வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கியது. இது வரை 31,650க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வேலைவாய்ப்புகளை பெற்றுத் தந்துள்ளது. நிகழ்ச்சியின் போது, சரவணன் ராஜ் முனிசாமி மாணவர்களுடன் கலந்துரையாடி, விமானத் துறையில் உள்ள வேலைவாய்ப்புகள், செயல்திறன் மேம்பாடு மற்றும் சர்வதேச வாய்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதனை தொடர்ந்து, டாக்டர் எஸ்.கே. தேவமணி புதிய அரங்கத்தை திறந்து வைத்தார். இந்த வளாக வேலைவாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், ஏர்ஏசியாவில் 6 மாத கால பயிற்சி பெறுவார்கள். அவர்களின் செயல்திறனைப் பொறுத்து உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மேலும், இந்த திட்டம் மூலம் சர்வதேச விமான செயல்பாடுகள் குறித்து அனுபவம் பெறும் வாய்ப்பும், வெளிநாட்டு பணியிட முன்னேற்றத்திற்கான பாதையும் உருவாகிறது.இந்த முயற்சி, கல்வி பயிற்சியையும் தொழில்துறை தேவைகளையும் இணைக்கும் பாலமாக இருந்து, மாணவர்கள் உலகளாவிய விமானத் துறையில் தங்கள் தொழில்முனைவை முன்னெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்