உள்ளூர் செய்திகள்

ஜவகர் சிறுவர் இல்லத்தில் கோடைக்கால பயிற்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஜவகர் சிறுவர் இல்லத்தில் நடந்து வரும் கோடைக்கால பயிற்சி முகாமில், மாணவர்கள் பரத நாட்டியம் மற்றும் ஓவியம் வரையும் பயிற்சி எடுத்தனர்.கோடை விடுமுறையையொட்டி, பள்ளிக் கல்வி இயக்கத்தின் மூலம் ஜவகர் சிறுவர் இல்லம் சார்பில், பரதம், கிராமிய நடனம், வாய்ப்பாட்டு, இசை, வயலின், வீணை, மிருதங்கம், ஓவியம் உள்ளிட்ட பல்வகைக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சிகள் நடத்தி வருகிறது.இந்த பயிற்சி முகாம், ஜவகர் சிறுவர் இல்லம் உட்பட 9 இடங்களில் கடந்த 2ம் தேதி துவங்கியது.முகாம் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜவகர் சிறுவர் இல்லத்தில் நேற்று பரதம், ஓவியம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.இதில், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்