உள்ளூர் செய்திகள்

டில்லி பல்கலை துணை வேந்தர் வேண்டுகோள்

புதுடில்லி: “நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாணவர் அமைப்புகள் தேவையற்ற குழப்பத்தை தவிர்க்க வேண்டும்,” என, டில்லி பல்கலை துணை வேந்தர் யோகேஷ் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இளநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, 'நீட்' தேசிய தகுதி நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, மறுதேதி விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுதும் மாணவர் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.இந்நிலையில், டில்லி பல்கலை துணை வேந்தர் யோகேஷ் சிங் கூறியதாவது:நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள், அதை கைவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நம் நாட்டின் கல்வி அமைப்பின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தேவையற்ற அரசியல் குழப்பமும், சீர்குலைவும் ஏற்பட்டால், அது நம் மாணவ, மாணவியரைத் தான் பாதிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்