பணி நிரந்தரத்துக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்
சென்னை: அரசின் பணி நிரந்தர உத்தரவிற்காக காத்திருப்பதாக, பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், தையல், இசை, தோட்டக்கலை, கட்டடக்கலை, வாழ்க்கைக் கல்வி ஆகிய பாடங்களை நடத்தும் ஆசிரியர்களாக, 15,000 ரூபாய் சம்பளத்தில், கடந்த 15 ஆண்டுகளாக, 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறோம்.தமிழக சட்டசபை தேர்தலில் வென்று, ஆட்சியமைத்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசு, தற்போது பெரும்பான்மையையும் நிரூபித்துள்ளது.அரசு நிர்வாகத்தில் ஐந்தாண்டுகள் பணி செய்திருந்தால், அவர்கள் நிரந்தரமாக்கப்படுவர் என, தன் தேர்தல் அறிக்கையில் தெரிவித்த முதல்வர் விஜய், எங்களை பணி நிரந்தரம் செய்வார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.