உள்ளூர் செய்திகள்

முதுநிலை பாடப்பிரிவுக்கு நேரடி சேர்க்கை அறிவிப்பு

தர்மபுரி: தர்மபுரி, பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான நேரடிச் சேர்க்கை அறிவிப்பு குறித்து, ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், முதுகலை மற்றும் முதுகலைஅறிவியல் பாடப்பிரிவுகளில், 2026 - 2027ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதில், எம்.ஏ., ஆங்கிலம், எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்.சி., கணிதவியல், இயற்பியல், கணினிஅறிவியல், உயிர்தொழிநுட்பவியல், புவியமைப்பியல் போன்ற, 8 முதுநிலை பாடப்பிரிவுகள் மற்றும் மேற்கண்ட பாடபிரிவுகளில் முனைவர் பட்ட ஆராய்ச்சி (பி.எச்.டி.,) பிரிவுகள் உள்ளன. இம்மையத்தில் படிக்கும் மாணாக்கர்களுக்கு சிறப்பு சொற்பொழிவுகள், பயிற்சி பட்டறை, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கம், தொழில்முறை பயணம், போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஆராய்ச்சி படிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பு ஆகியவை, பெரியார் பல்கலைக்கழகத்தின், www.periyaruniversity.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், பதிவேற்றம் செய்த விண்ணப்பத்தை நகல் எடுத்து, உரிய சான்றிதழ்களுடன் இயக்குனர் (பொ) பெரியார் பல்கலைகழக பட்டமேற்-படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தர்மபுரி, 635 205 என்ற முகவரிக்கு நேரில் அல்லது தபால் மூலமாக அனுப்பி வைக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 04342 - 266399 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்