உள்ளூர் செய்திகள்

கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்பு

புதுச்சேரி: தட்டாஞ்சாவடி தொகுதியில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் கல்வித்திறன் ஊக்கப்பரிசு பெற சான்றிதழ்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் ஆனந்தன் விடுத்துள்ள அறிக்கை:ஸ்ரீமதி விஜயலட்சுமி அம்மாள் அறக்கட்டளை சார்பில், 16ம் ஆண்டு கல்வித்திறன் பரிசளிப்பு விழா நடைபெற உள்ளது. விழாவில், 2025 - 26ம் கல்வியாண்டில் நடந்த 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்ற தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, முதல்வர் ரங்கசாமி மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.விழாவில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், தங்களது மதிப்பெண் சான்றிதழ் நகல், மாணவரின் புகைப்படம், மாநில மற்றும் பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தால், அதற்கான சான்றிதழ், கல்லுாரி சான்றிதழ், தந்தை, தாயின் வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.அவற்றை, லாஸ்பேட்டை, ஏர்போர்ட் சாலை, பாரி நகர், 2வது தெருவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே உள்ள தட்டாஞ்சாவடி தொகுதி அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். தட்டாஞ்சாவடி தொகுதியைச் சேர்ந்த தகுதியான மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்