உள்ளூர் செய்திகள்

மேடை கலைகளை ஆவணப்படுத்தும் தமிழாய்வு நிறுவனம்

சென்னை: செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், மேடை கலைகளை, வீடியோக்களாக பதிவு செய்து, அதன் இணையதளத்தில், இன்று முதல் வெளியிட்டு, ஆவணப்படுத்த உள்ளது.இது குறித்து, அதன் இயக்குநர் சந்திரசேகர் கூறியதாவது: தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை மற்றும் சிறப்புகளை, உலக மக்கள் அறியும் வகையிலான பணிகளை, செம்மொழி நிறுவனம் செய்கிறது.அந்த வகையில், தமிழர்களின் பாரம்பரிய கலை மரபுகளை ஆவணப்படுத்தி, அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வகையில், அரிய மேடை கலைகளை, ஆவணப்படுத்தி வருகிறோம். அதன் முன்னோட்ட காட்சி வெளியீடு, இன்று காலை நிறுவனத்தில் நடக்க உள்ளது.இத்திட்டத்தில் முதல் கட்டமாக, 10 அரிய கலைகளை தேர்வு செய்து, அந்த கலைஞர்களின் நிகழ்ச்சிகளை, நிறுவனத்திலேயே நிகழ்த்தி, அவற்றை படம் பிடித்து, 105 வீடியோக்களாக செம்மொழி நிறுவன, 'யூ டியூப்' பக்கத்தில் பதிவேற்றி உள்ளோம். இவை, மேடை கலை சார்ந்த ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்