சிறந்த நுால் பரிசுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
சென்னை: 'தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த நுால் பரிசுக்கு, நுாலாசிரியர்கள், தங்களின் நுால்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்' என, தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.கவிதை, புதினம், சிறுகதை, நாடகம், சிறுவர் இலக்கியம், திறனாய்வு உள்ளிட்ட 33 வகைகளைச் சார்ந்த நுால்களை எழுதியோர் அல்லது பதிப்பித்தோர், 'tamilvalarchithurai@tn.gov.in' என்ற இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, ஆக., 31ம் தேதிக்குள், தங்கள் நுால்களுடன் அனுப்ப வேண்டும்.பரிசுக்கு தேர்வாகும் நுாலின் ஆசிரியர்களுக்கு தலா, 50,000 ரூபாய், அதை பதிப்பித்த பதிப்பகத்துக்கு, 25,000 ரூபாய், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, 044 - 28190412; 28190413 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.