உள்ளூர் செய்திகள்

முதல்வர் மாநில விருது: விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் விதமாக முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் அடங்கியது. மாநில அளவில் மூன்று ஆண், மூன்று பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று விருது வழங்கப்படும்.இதற்கான தகுதிகள் குறித்து ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விருதுக்கு, 15 வயது முதல் 35 வயது ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும். தமிழகத்தில் குடியிருந்ததற்கான சான்று இணைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலை, கல்லுாரி மற்றும் பள்ளிகளில் வேலை செய்யபவர்கள் விண்ணப்பிக்க முடியாது. உள்ளூர் மக்களிடம் பெற்ற செல்வாக்கு விருதுக்கான பரிசீலனையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆன்லைனில் வரும், 15ம் தேதி மாலை, 05:00 மணிக்குள் ஈரோடு மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்