தேசிய நல்லாசிரியர் விருது விண்ணப்பிக்க அழைப்பு
உடுமலை: தேசிய நல்லாசிரியர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அழைப்பு விடுத்துள்ளார்.முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப். 5ம் தேதி ஆசிரியர் தினத்தையொட்டி, மத்திய கல்வி அமைச்சகம் தேசிய நல்லாசிரியர் விருதை வழங்குகிறது.விருதுக்கு தகுதியான ஆசிரியர்கள், தேசிய நல்லாசிரியர் விருது இணையதளத்தில் தங்களது முழு விபரங்களுடன் ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், “மாவட்ட அளவில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, ஜூலை 14 முதல் 21 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். தகுதியான ஆசிரியர்களின் விபரங்கள் மாநிலக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே, தகுதியான ஆசிரியர்கள் காலதாமதமின்றி விண்ணப்பிக்க வேண்டும்” என்றார்.