அரசு பள்ளி மாணவர்கள் கள பயணம்
செஞ்சி: நெகனுார் அரசு பள்ளி மாணவர்கள் களபயணம் மேற்கொண்டனர்.செஞ்சி அடுத்த நெகனுார் அரசு மேல்நிலை பள்ளியை சேர்ந்த, 270 மாணவர்கள், நெகனுார் பட்டி கிராமத்தில் தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், அடுக்காங்கல் சமணர் பள்ளி மற்றும் தமிழ் பிரமி கல்வெட்டு பகுதியில் கல்வி சார்ந்த கள ஆய்வு மேற்கொண்டனர்.சமூக ஆர்வலர் ஜோலாதாஸ் சமண பள்ளியின் வரலாற்றையும், சமண துறவிகள் தங்கி இருந்து மருத்துவம், கல்வி, அற உபதேசம் செய்தது குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.மாணவர்களை உதவி தலைமையாசிரியர் சுமன், ஆசிரியர்கள் ரமேஷ் குமார், ஆனந்த செல்வம், சரவணன், சந்திரலேகா, மாலதி, எழிலரசி, ரமா ஆகியோர் வழிநடத்தினர்.