உள்ளூர் செய்திகள்

ஆயுர்வேத மருத்துவ படிப்பு விண்ணிப்பிக்க அழைப்பு

சென்னை: 'ஆயுர்வேத இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது' என, சென்னை கலெக்டர் மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள சித்தா, ஹோமியோபதி, யோகா, யுனானி, ஆயுர்வேதா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு, 2026 - 27ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது.விண்ணப்பதாரர்கள், 'ஆன்லைன்' விண்ணப்ப படிவங்களை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும். அரசு மற்றும் அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடம் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவ வளாகம், அரும்பாக்கம் - 600 106 என்ற முகவரிக்கு, வரும் 31ம் தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் அல்லது கூரியர் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அது கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்