உள்ளூர் செய்திகள்

அரிஸ்டோ பள்ளி மாணவர்கள் சமூக சேவை

கடலுார்: கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி மாணவர்கள் புதுக்குப்பம் கிளை நுாலகத்தில் துாய்மை பணி மேற்கொண்டனர். கடலுார், புதுக்குப்பம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் திறந்து வைத்து கிளை நுாலகம் உள்ளது.இங்கு, கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியின் 9ம் வகுப்பு சாரணர் மாணவர்கள், நுாலக வளாகத்தை சுத்தம் செய்தனர். தொடர்ந்து, நுாலக வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து, நுாலகத்திற்கு புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்