உள்ளூர் செய்திகள்

அரசு மாதிரி பள்ளியில் முப்பெரும் விழா

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த ஏ. குமாரமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், 100 மரக்கன்றுகள் நடுதல், நுாலகத்திற்கு புத்தகம் வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் என முப்பெரும் விழா ரோட்டரி சங்கம் சார்பில் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மரக்கன்றுகளை நட்டு, நுாலகத்திற்கு புத்தகங்கள் வழங்கி, விளையாட்டு உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினர்.பள்ளி ஆசிரியர்கள் ஹேமலதா, இருதயராஜ், ரமேஷ், நல்லசிவன், சதீஷ்குமார், கதிரவன், நுாலக ஆசிரியர் தேவநாதன், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுற்று சூழல் மன்ற தலைவர் சத்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்