உள்ளூர் செய்திகள்

பாரதிதாசன் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். பார்கவி வரவேற்றார். ஜெயஸ்ரீ நோக்கவுரை ஆற்றினார். பேராசிரியர் சேதுபதி தொடக்கவுரை நிகழ்த்தினார்.தொடர்ந்து, ஆசிரியர், தாய், தந்தை, தோழன், தோழி, தெய்வம் என்ற தலைப்புகளில் மாணவிகள் கவிதை வாசித்தனர். தமிழ்த்துறை மாணவிகள் தனுஷி, கீர்த்தி, தரணி ஆகியோர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேராசிரியர் மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்