அரசு பள்ளியில் ஆசிரியர் தின விழா
புதுச்சேரி: லாஸ்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.பள்ளி துணை முதல்வர் சந்திரன் தலைமை தாங்கினார். சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் பங்கேற்று, அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து, 2025 - 26ம் ஆண்டு 10வது மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.விழாவில், இவ்வாண்டு மாநில கல்வி அமைச்சர் விருதினை பெற்ற ஆசிரியர் பார்வதிக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. விரிவுரையாளர் முகமது பாரூக் வரவேற்றார். விரிவுரையாளர் ரத்தினவேலு தொகுத்து வழங்கினார். தலைமை ஆசிரியர் தனபாக்கியம் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை உடற்கல்வி விரிவுரையாளர் ஆரோக்கியராஜ் சீசர், நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜாக்லின் சுபாஷினி செய்திருந்தனர். ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சப்தகிரி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் என்.ஆர்.காங்., உறுப்பினர்கள் பங்கேற்றனர்.