உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி மாணவருக்கு டைரி விநியோகம்

அன்னூர்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இலவச டைரி வழங்கப்பட்டது.அன்னூர் குளங்கள் அறக்கட்டளை சார்பில், கடந்த இரண்டு ஆண்டுகளாக, 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னூர் குளம் சீரமைக்கு பணி மற்றும் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சப்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தில், 100 மாணவ, மாணவியருக்கு, டைரிகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள், பள்ளி ஆசிரியைகள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்