ரங்கபூபதி கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
செஞ்சி: திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கினார். நர்சிங் கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். பார்மசி முதல்வர் அருள்செல்வி முன்னிலை வகித்தார்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், பலுான் உடைத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேராசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பேராசிரியர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் சுகிமா, கலைமதி, கஸ்துாரி, சுகந்தி, கோசலை, பிரதிபா, சுந்தரி மற்றும் பி.எஸ்.சி., நர்சிங், டி.ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., டி.பார்ம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.