உள்ளூர் செய்திகள்

உயர்கல்வி படிக்க கல்வி கடன் முகாம்

பீளமேடு: உயர்கல்வி பயிலும் மற்றும் சேர உள்ள மாணவர்களுக்கு கல்விக் கடன் எளிதில் கிடைக்கும் வகையில், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் 17ம் தேதி கல்விக் கடன் முகாம் நடக்கிறது.காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் முகாமில் பல்வேறு வங்கிகளின் அலுவலர்கள் பங்கேற்று, கல்விக் கடன் திட்டங்கள், தகுதிகள், வட்டி விகிதம், திருப்பி செலுத்தும் காலம் மற்றும் பி.எம்., வித்யாலட்சுமி உள்ளிட்ட அரசு கடன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர்.மாணவர்கள் ஆதார், பான் கார்டு, 10 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்று, கல்லூரி கட்டண விவரம், போனபைட் சர்டிபிகேட், வருமான சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.பெற்றோரின் ஆதார், பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், புகைப்படம் ஆகியவற்றையும் கொண்டு வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்