அரசு பாலிடெக்னிக்கில் பட்டயம் அளிப்பு விழா
சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் பட்டயம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு கல்லுாரி முதல்வர் லலிதா தலைமை தாங்கினார். துணை முதல்வர் சிவகங்கா, கல்லுாரி முதல்வரின் நேர்முக உதவியாளர் சண்முகம், பொருளாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். இயந்திரவியல் துறை விரிவுரையாளர் கார்த்திக் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர்கள் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுரளி, சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை ஆகியோர் 50 மாணவ, மாணவிகளுக்கு பட்டய சான்றிதழ் வழங்கி பேசினர்.நிகழ்ச்சியில் கல்லுாரியின் அனைத்து துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.