அரசு பள்ளி மாணவர்களுக்கு தொல்லியல் விழிப்புணர்வு
ஓமலுார்: அரசு பள்ளியில் மாணவர்களுக்கு, 'தொல்லியல்' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.ஓமலுார் அருகே தொளசம்பட்டியில் உள்ள அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். அதில் சேலம் கொங்கு நாடு தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் விஜயகுமார், 'தொல்லியலும் அறிவியலும்' தலைப்பில் பேசினார். நிறுவன செயலர் அன்பரசி, கோவிலில் உள்ள கல்வெட்டு எழுத்து, சிற்பங்களை பாதுகாக்க அறிவுறுத்தினார்.