உள்ளூர் செய்திகள்

ராகுலுடன் கலந்துரையாட தமிழக மாணவர்கள் ஆர்வம்

சென்னை தீவுத்திடலில், வரும் 10ம் தேதி 'மாணவர்களின் குரல்' நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பங்கேற்கிறார். மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்பதோடு, வருங்கால இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் கலந்துரையாடுகிறார். 'நீட்' வினாத்தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்காக போராடும் மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். நாட்டின் எதிர்காலமான மாணவர்களை பாதுகாக்க முடியாவிட்டால், நாட்டை எப்படி காப்பாற்ற முடியும்? என்பதை குறித்தும் கலந்துரையாடுகிறார்.சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, தமிழகம் முழுதும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள், தங்கள் தேவைகளை ராகுலிடம் முன்வைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்