உள்ளூர் செய்திகள்

அசல் சான்றிதழ் பெற கடைசி வாய்ப்பு

கோவை: அரசு மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2018 முதல் 2023 வரை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவிகள், தங்களது அசல் சான்றிதழ்களை வரும் அக்., 30ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தொழிற்பயிற்சி நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'பெறப்படாத சான்றிதழ்கள் சென்னையில் உள்ள அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதன்பின் சான்றிதழ்களை பெற வேண்டுமெனில், ஆவணக் காப்பகத்தை நேரில் அணுக வேண்டிய நிலை ஏற்படும்' என்றனர்.சான்றிதழ்களை பெற வருவோர், தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றதற்கான அடையாள அட்டை அல்லது கட்டணம் செலுத்திய ரசீதை கொண்டு வர வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 05:00 மணி வரை சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு 0422-2965533, 2965534.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்