வேளாண் பட்டதாரிகளே... வேலை வாய்ப்பு வேண்டுமா?
கோவை: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட தொழில்நுட்ப உதவியாளர் (பண்ணை) பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பி.எஸ்சி., வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அறிவியல், வனவியல் அல்லது மீன்வள அறிவியல் ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம்; குறைந்தபட்சம் 27 வயது; அதிகபட்சம் 65 வயது.அரசு திட்டங்கள், அரசு சாரா, தனியார் நிறுவனங்கள் அல்லது விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளில் களப்பணியில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் அனுபவம். தகுதியுள்ளவர்கள், உரிய சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வரும் 16ம் தேதி மாலை 5:45 மணிக்குள் 'செயலாளர், கோவை மாவட்ட முகமை, வட்டார வளர்ச்சி அலுவலகம், பாலக்காடு மெயின் ரோடு, மதுக்கரை' என்ற முகவரிக்கு அல்லது makamaikovai@gmail.com என்ற இ-மெயிலில் அனுப்பலாம்.