உள்ளூர் செய்திகள்

தற்காலிக செவிலியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்காலிக செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் கீழ் செயல்படும் மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் மற்றும் மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு மையங்களில் தேசிய நலவாழ்வு குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக செவிலியர்கள் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளம் https://kallakurichi.nic.in/ மூலம் விண்ணப்ப படிவம் மற்றும் கூடுதல் விபரங்களைப் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனைத்து சான்றுகளின் சுயசான்றொப்பமிட்ட நகல்கள், புகைப்படங்களுடன் நிர்வாக செயலாளர், மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம், கள்ளக்குறிச்சி 606 213 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் டிசம்பர் 4ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பூர்த்தி செய்யாத, உரிய சான்றுகள் இணைக்கப்படாமல் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்