சி.எஸ்.இ.சி.,யில் இளநிலை உதவியாளர் பணி வாய்ப்பு
புதுடில்லிப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள சென்டர் பார் சயின்ஸ் எஜூகேஷன் அண்டு கம்யூனிட்டி (சி.எஸ்.இ.சி.,) எண்பதுகளின் இறுதியில் நிறுவப்பட்டது. சமூகத்திற்கும் அறிவியல் முன்னேற்றங்களுக்கும் இடையே ஒரு பாலம் போல செயல்படும் இந்த அமைப்பு புது டில்லிப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். பள்ளி மற்றும் கல்லூரி அளவில் அறிவியல் முன்னேற்றங்களை இனம் காண்பதும், வளர்ப்பதும் இந்த அமைப்பின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் இளநிலை உதவியாளர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன தேவை ?சி.எஸ்.இ.சி., யின் இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் மூலமாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் ஒரு நிமிடத்திற்கு 40 வார்த்தைகளை டைப்பிங் செய்யும் திறமையும் தேவைப்படும். டிப்ளமோ இன் ஆபிஸ் மேனேஜ்மெண்ட் அண்டு செகரடேரியல் பிராக்டிஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை உள்ளது. கடிதங்களை டிராப்டிங் செய்தல், ஆங்கிலத்தில் போதுமான திறமை, டேட்டா பிராசசிங், அக்கவுண்டிங் போன்ற திறமைகள் தேவைப்படும் பணியாகும் இது. தேர்ச்சி முறைசி.எஸ்.இ.சி., யின் இளநிலை உதவியாளர் பதவிக்கு வரும் விண்ணப்பகளின் அடிப்படையில் எழுத்துத் தேர்வு/டைப்பிங் திறனறியும் தேர்வு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். விண்ணப்பிப்பது எப்படி?விண்ணப்பத்தில் முழு விபரங்களை நிரப்பி கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ் நகல்களையும் இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 15.12.2010 க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு விபரங்களறிய இந்த அமைப்பின் இணைய தளத்தைப் பார்க்கவும். முகவரி The Director,Centre for Science Education and Communication 2nd Floor,Academic Research Centre Building (Opposite SGTB Khalsa College),Patel Chest Institute Marg, University of Delhi,Delhi - 110007.