உள்ளூர் செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

விருதுநகர்: தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்களின் கூட்டு இயக்கங்கள் சார்பில், ஆறு மையங்களில் 30 ஆயிரம் பேர், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குவது உட்பட 12 அம்ச கோரிக்கைகளுக்காக, இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர். உண்ணாவிரதம் சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் நடக்கிறது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் சுப்பையா கூறுகையில், “அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை. கோரிக்கைகள் நிறைவேற்ற தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்