உள்ளூர் செய்திகள்

சட்டம், சமூக அறிவியல் மாணவர்களுக்கு வாய்ப்பு

காமன்வெல்த் ஹியூமன் ரைட்ஸ் இனிஷியேடிவ்(சி.எச்.ஆர்.ஐ) என்ற அமைப்பு, அதன் திட்டங்களில் பணியாற்ற மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளிக்கிறது. டெல்லியிலுள்ள சி.எச்.ஆர்.ஐ. தலைமையகம், கானா, மற்றும் லண்டன் போன்ற இடங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் உள்ளன. சட்டம் மற்றும் சமூக அறிவியல் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்கள் ஒரு வருடம் பணியாற்றுவதற்கான உத்திரவாதம் தர வேண்டும். இந்த மாணவர்களுக்கு திட்ட உதவியாளர் அல்லது ஆராய்ச்சியாளர் என்ற நிலைகளில் பொறுப்புகள் வழங்கப்படும். அதேசமயம் குறைந்தபட்சம் 2 வருடம் பணி அனுபவமுள்ள பட்டதாரிகளுக்கு திட்ட அதிகாரி பதவி வழங்கப்படும். ஆனால் அவர்கள் 2 வருடம் பணியாற்றுவதற்கான உத்திரவாதம் தர வேண்டும். சம்பளமும், கூட்டாக தங்குமிடமும் வழங்கப்படும். இதைப்பற்றிய விரிவான விவரங்களுக்கு என்ற வலைத்தளம் www.humanrightsinitiative.org செல்லவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்