உள்ளூர் செய்திகள்

மாணவர்களின் தேர்வு கவலைக்கு சி.பி.எஸ்.இ. ஆறுதல்

மாணவர்கள் தேர்வு சம்பந்தமான கவலை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுபட உதவும்பொருட்டு வருடாந்திர, தேர்வுக்கு முந்தைய ஆலோசனை சேவைகளை சி.பி.எஸ்.இ. துவக்கியுள்ளது. முதல்கட்ட ஆலோசனை சேவை 01-02-11 ஆண்டு துவங்கியது. இந்த ஆலோசனை சேவை ஏப்ரல் 13 ம் தேதிவரை நடைபெறும். மாணவர்கள் தொலைபேசி மூலமாக ஆலோசனை பெறக்கூடிய இந்த சேவையில் நன்கு பயிற்சிபெற்ற கவுன்சிலர்கள் மற்றும் பள்ளிகளின் முதல்வர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இந்தியாவிலுள்ள மாணவர்கள் 44 லைன்களில் தொலைபேசி அழைப்பு விடுக்கலாம். மேலும் துபாய், கத்தார், குவைத் மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாடுகளுக்கு தலா 1 லைன் ஒதுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள மாணவர்கள் 1800 11 7002 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து அதன்மூலம் சி.பி.எஸ்.இ. ஹெல்ப் லைனுக்கான மையப்படுத்தப்பட்ட(சென்ட்ரலைஸ்ட்) அணுகலைப் பெறலாம். மேலும் சி.பி.எஸ்.இ. வலைதளத்திற்கு சென்று அதன்மூலம் தேர்வு சம்பந்தமான சந்தேகங்களையும் கேட்கலாம். இவைத்தவிர தேர்வு கவலையை போக்குவதற்கான ஆலோசனைகள் www.cbse.nic.in என்ற வலைத்தளத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்