விரைவில் சிவில் சர்வீஸ் தேர்வு அறிவிப்புகள்
சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான யு.பி.எஸ்.சி. அறிவிப்பு இந்த மாதம் 19 ம் தேதி வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசித் தேதி மார்ச் 21. மேலும் முதல்நிலைத் தேர்வை(பிரிலிமினரி தேர்வு) வரும் ஜூன் மாதம் 12 ம் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 21 வயது முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரிகள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 33 வயது வரையும், எஸ்.சி/எஸ்.டி. பிரிவினருக்கு 35 வயது வரையும் சலுகை உண்டு. பிப்ரவரி 19 ம் தேதி வெளிவரும் யு.பி.எஸ்.சி. அறிவிப்புகள் முக்கிய நாளிதழ்களிலும், எம்ப்ளாய்மென்ட் நியூஸ் மற்றும் யு.பி.எஸ்.சி. வலைத்தளத்திலும் வெளிவரும்.