உள்ளூர் செய்திகள்

டெல்லியின் ஏழைக் குழந்தைகளுக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி

மேல்போர்ன் யுனிவர்சிட்டி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஆஷா அமைப்பும் செய்து கொண்டுள்ள பரிமாற்ற உடன்படிக்கையின் அடிப்படையில் டெல்லியில் உள்ள ஏழைக் குழந்தைகள் ஆஸ்திரேலியா சென்று அங்கு கல்வி பயிலும் வாய்ப்பினை பெறுவார்கள் என்று ஆஷா அமைப்பின் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன. ஆஷா அமைப்பின் நிறுவனர் கிரண் மார்டின் கூறுகையில், இது போன்ற ஒரு விஷயம் இது வரை நடந்தது இல்லை. நகர்புற ஏழை  குழந்தைகள் குறிப்பாக குடிசையில் வாழும் குழந்தைகள் தங்களது உயர் கல்வியை இந்தியாவை தவிர்த்து வெளி நாடுகளில் பெரும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படும் என்றார்.இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டின்படி, டெல்லியில் உள்ள நகர்புற ஏழை மாணவர்களுக்கு ஆய்வுகள், கல்வி, சமுதாய கடமை என மூன்று பிரிவுகளின் கீழ் பயிற்சி கொடுக்கப்படுகிறது. அடிப்படைக் கல்வி கூட கிடைக்காத குழந்தைகளுக்கு இங்கு பட்டபடிப்பு பயிலும் வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பது நல்ல துவக்கத்தைக் கொடுக்கும். மேலும் ஏழைக் குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு தேவையானவற்றை அளிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம் என ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் யுனிவர்சிடியின் இயக்குனர் அமிதாப் மட்டு கூறினார். இந்த உடன்படிக்கையின்படி 40௦ திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. 2011 ஆம் ஆண்டில் மனிதவளம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம், வணிகம் உள்ளிட்ட பல துறைகளின் கீழ் இந்த திட்டப் பணிகள் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய இந்திய மையம், மெல்போர்ன் யுனிர்வசிட்டி மற்றும் ஆஷா அமைப்பு ஆகியவை இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.  டெல்லியில் நேற்று நடந்த விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்