உள்ளூர் செய்திகள்

அண்ணா பல்கலையில் தேர்வு தேதிகள் மாற்றம்

சென்னை: "சட்டசபை தேர்தலையொட்டி, பல்கலைக்கழக தேர்வு தேதிகள் மாற்றப்படும்' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறினார். உயிரி மருத்துவ அறிவியல் துறையில் இணைந்து பணியாற்ற வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகரும், பாரத் ஸ்கேன்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் இமானுவேலும் நேற்று கையெழுத்திட்டனர். நிகழ்ச்சிக்கு பின், அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் நிருபர்களிடம் கூறும் போது, "சட்டசபை தேர்தலையொட்டி, அடுத்த மாதம் 10ம் தேதி துவங்குவதாக இருந்த அண்ணா பல்கலை தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்படும். மாற்றியமைக்கப்பட்ட தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்