ஏ.ஐ.சி.டி.இ. கெடுபிடிகளை சமாளிக்க புதிய வழிகாட்டுதல்கள்
பெடரேஷன் ஆப் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி அந்த விதிமுறைகளை உருவாக்குகிறது. இதனால் அத்தகைய கல்லூரிகள் பாதிக்கப்படாது. அந்த விதிமுறைகள் எப்போது உருவாக்கப்படும் என்ற கால அளவு நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும், கூடிய விரைவில் அவை தயாரிக்கப்படும் என்று அந்த அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜீவ் குமார் தெரிவித்தார். பல்வேறான கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் டைரக்டர்கள் மற்றும் டீன்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திற்கு பிறகு அவர் இதை தெரிவித்தார். ஏ.ஐ.சி.டி.இ. விதிமுறைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஏ.ஐ.சி.டி.இ. அறிவிப்பில், மேலாண்மை கல்வி நிறுவனங்களை நடத்துவதில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பெரும் பங்கை குறிப்பிடுவதோடு, உலக அளவில் பிரபலமடைந்து வரும் ஒரு வருட எம்.பி.ஏ. படிப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. உலகளவில் சிறந்த பொருளாதார படிப்பிற்கான மையமாக இந்தியா வளர்ந்துவரும் இந்த சூழலில், இதுபோன்ற விதிமுறைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று ராஜீவ் குமார் மேலும் கூறினார்.