திருச்சுழியில் காமராஜ் பல்கலையின் உறுப்பு கல்லூரி
மதுரை காமராஜ் பல்கலையின் நான்காவது உறுப்புக் கல்லூரி திருச்சுழியில் துவக்கப்படும் என கல்விப் பேரவை கூட்டத்தில் துணைவேந்தர் கற்பக குமாரவேல் பேசினார். அவர் பேசியதாவது, "மதுரை காமராஜ் பல்கலை, சென்னை பல்கலை இணைந்து இரு பல்கலையிலும் தனித்தனியாக உயிர் அறிவியல் புலம் துவக்க உள்ளன. ஒவ்வொரு பல்கலையும் 50 லட்சம் ரூபாய் ஒதுக்கும். முதற்கட்டமாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். பேராசிரியர்களுக்கு இருநாட்கள் கருத்தரங்கு நடத்தப்படும். மதுரை, ஆண்டிபட்டி, கோட்டூரை தொடர்ந்து மதுரை காமராஜ் பல்கலையின் உறுப்புக் கல்லூரி விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் துவக்கப்படும். திட்ட மதிப்பு 9.5 கோடி ரூபாய். மத்திய அரசு 2.67 கோடி, மாநில அரசு 5.33 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இந்தக் கல்லூரி 2011-12 கல்வியாண்டில் செயல்படத் துவங்கும்" என்றார்.