தங்கத்தின் தரம் கண்டறிய வரும் 10ம் தேதி பயிற்சி துவக்கம்
தஞ்சாவூர்: "தங்கத்தின் தரம் கண்டறியும் பயிற்சி வரும் 10ம் தேதி முதல் துவக்கும்" என தஞ்சாவூர் சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் அன்பு பசும்படியார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நகைக் கடைகளிலும், அடகுக் கடைகளிலும், வங்கிகளிலும் நகைகளின் புழக்கம் அதிகமாகவுள்ளது. தங்கத்தை மதிப்பீடு செய்து, அதன் தரத்தை கண்டறிய வேண்டியது அவசியம். இதற்கு அறிவியல் பூர்வமான பயிற்சி தேவை. நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்த பயிற்சியின் போது வகுப்பறை பயிற்சியில் அடிப்படை உலோகவியல், உலோகத்தின் பயன்பாடு, தங்கத்தை பற்றிய அடிப்படை விவரம், தங்கத்தின் விலை கணக்கிடும் முறை, சுத்த தங்கம் கணக்கிடும் முறை என்று பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். இந்த பயிற்சி தஞ்சை சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வரும் 10ம் தேதி துவங்கும். தொடர்ந்து 18 நாட்கள் பயிற்சி நடக்கும். பயிற்சி முடிவில் தமிழக அரசின் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.