பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ. 10 ஆயிரம் கோடி!
அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பை மேம்படுத்துதல், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான நான்கரை லட்சம் ஆசிரியர்கள், கல்வித்துறையின் பல்வேறு அடுக்குகளில் உள்ள அதிகாரிகளுக்கு முறையாக பயிற்சி அளித்தல், வரும் கல்வியாண்டில் பல ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருப்பதால், அதிகளவில் நிதி ஒதுக் கீடு செய்யப்பட உள்ளது.கடந்த கால ஆட்சியில், பள்ளிக் கல்வித்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 5,000 கோடி ரூபாய்க்குள் இருந்தது. 2006ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், பள்ளிக் கல்வித்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டு, பட்ஜெட் ஒதுக்கீடும் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.கடந்த பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித்துறைக்கு 9,147 கோடியே 58 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.இந்த அளவு, வரும் பட்ஜெட் டில் 10 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரத்து 200 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கடந்த மூன்றரை ஆண்டுகளில், 30 ஆயிரத்திற்கும் அதிகமாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பள்ளிகளும் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளன.அத்துடன், தரம் உயர்த்தப் படும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இதற்கேற்ப, புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த பட்ஜெட்டில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர் நியமனங்கள் அறிவிக்கப்பட்டு, அது படிப்படியாக நடந்து வருகிறது.வரும் கல்வியாண்டில் இருந்து, சமச் சீர் கல்வித் திட்டம் அமலுக்கு வருகிறது. வெறும் பொதுவான பாடத்திட் டங்களை மட்டும் மாணவர்களுக்கு வினியோகித்தால், தரமான கல்வி வந்து விடாது என்பதையும், உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கி, ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரித்தால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதையும் அரசு நன்றாக உணர்ந்துள்ளது.அதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதிகரிக்க விரிவாக திட்டமிடப்பட்டு வருகிறது. முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என நான்கரை லட்சம் ஆசிரியர்கள் மற்றும் தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஆகியவற்றின் கீழ் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் முறையாக பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக, மாநிலக் கல்வி மேலாண்மை மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரலில் இந்நிறுவனம் துவக்கப்பட இருந்தாலும், இதன் சார்பில் இப்போதே பயிற்சி துவக்கப்பட்டுள்ளது.இந்நிறுவனத்தில், இணை இயக்குனர் அந்தஸ்தில் ஒரு அதிகாரியும், மற்ற அலுவலர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்து புதிய திட்டங்கள், தேவையான சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க விரைவில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.பல்வேறு ஆசிரியர் சங்க பிரதிநிதிகளை அழைத்து, அவர்களின் கருத்துக் களை கேட்பதற்கு துறை திட்டமிட்டுள் ளது. இப்படி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதால், நிதி ஒதுக்கீடு தாராளமாக இருக்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.