உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிக்கு அருகே குவிந்த 10 மலைப்பாம்புகள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.ஆர்.பி., அணை அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் ஒரே இடத்தில், 10 மலைபாம்புகள் இருந்தன. மாணைவர்கள் மலைபாம்புகள் மீது கற்களை வீசியதால், பாம்புகள் தப்பி ஓடியது. மீதமிருந்த மூன்று மலைப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிறு மலை பகுதிகளில் அதிக அளவில் மலை பாம்புகள் வாழ்ந்து வருகிறது. மழை காலங்களிலும், வறட்சி காலங்களிலும் மலைபாம்புகள் மலை பகுதியை விட்டு உணவுக்காக அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு அடிக்கடி ஊர்ந்து வரும். கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பெரியமுத்தூர் மலைஅடிவாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் பின்புறம் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் நேற்று ஆடு மேய்து கொண்டிருந்தார். அப்போது, பள்ளியின் பின்புறம், 10 மலைபாம்புகள் ஒரே இடத்தில் இருந்ததை அவர் பார்த்து அதிர்ச்சியடைந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கூறினார். தகவல் அறிந்த பள்ளி மாணவ, மாணவிகள் பத்து மலைபாம்புகள் இருந்ததை அதிர்ச்சியுடன் பார்த்துள்ளனர். இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வனத்துறையை சேர்ந்த முருகன், கணபதி ஆகியோர் சென்று அனைத்து மலைபாம்பையும் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், வேடிக்கை பார்த்த பள்ளி மாணவர்கள் பாம்பு மீது கற்களை வீசினர். இதனால், மலைபாம்புகள் திசைக்கு ஒன்றாக தப்பி சென்றது. இறுதியில் மூன்று மலைபாம்புகளை மட்டுமே வனத்துறையினர் பிடித்து நாரளப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்